Twitter | Search | |
DMK
The Official DMK Twitter Account | திராவிட முன்னேற்றக் கழகம். |
20,887
Tweets
141
Following
445,023
Followers
Tweets
DMK 5h
"இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆய்வுசெய்ய அமைத்துள்ள குழுவில் தமிழறிஞர்கள் - தென்னிந்தியர் - வடகிழக்கு மாநிலத்தவர் - மைனாரிட்டிகள் - பட்டியலினத்தவர் இடம்பெற அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - கழக தலைவர் அவர்கள் அறிக்கை. Link:
Reply Retweet Like
DMK 7h
"மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடிமைகளாக ஆக்கும் சட்டங்கள்" - கழக விவசாய அணி மாநில தலைவர் திரு. என்.கே.கே.பெரியசாமி அவர்கள் அறிக்கை. Link:
Reply Retweet Like
DMK retweeted
Udhay 8h
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உள்பட நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணியின் ஒட்டுமொத்த நிர்வாகி விவரங்கள் அடங்கிய முரசொலி இதழை மா.அமைப்பாளர் ஒப்படைத்தேன். நிர்வாகி தேர்வுசெய்யும் பணியை ஒருங்கிணைத்த அண்ணன் மா.செயலாளர் , இளைஞரணி து.செயலாளர் நன்றி
Reply Retweet Like
DMK 7h
"இந்தியாவின் தென்முனையில் கிளம்பும் அறவழிப் போராட்ட உணர்வுத் தீ - நாடு முழுவதும் பரவட்டும்; நன்மை தராத சட்டங்களைப் பொசுக்கட்டும்; உலகத்தார்க்கு ஆணியாம் உழவர்களைப் போற்றட்டும்; விவசாயிகளின் வாழ்வு மலர்ந்து மணம் பெறட்டும்" - கழக தலைவர் அவர்கள் முழக்கம்.
Reply Retweet Like
DMK 7h
"செப்டம்பர் 28 நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டம் - விவசாயிகளின் பங்கேற்புடன், பொதுமக்களின் ஆதரவுடன் மத்திய - மாநில அரசுகளின் வஞ்சகத்தை அம்பலப்படுத்தட்டும்" - கழக தலைவர் அவர்கள் அறிக்கை.
Reply Retweet Like
DMK 7h
"ஆளுங்கட்சியான அதிமுக தன் பதவியைக் காப்பாற்றிக் கொண்டு மிச்சக்காலத்தை ஓட்டுவதற்காக - விவசாயிகளுக்குத் துரோகம் செய்து - மசோதாக்களை ஆதரித்து வாக்களித்து சட்டமாகத் துணை நின்றுள்ளது" - கழக தலைவர் அவர்கள் குற்றச்சாட்டு.
Reply Retweet Like
DMK 8h
விளம்பரம்: சிறுவிவசாயிகள் பெரும் பலன் பெறுவர். நிச்சய லாபங்களுடன் தொழில்நுட்பம் & உபகரணத்தின் பயன்களை பெறுவர். உண்மை: இது பச்சைப் பொய். தொழில்நுட்பம் “கார்ப்பரேட் கம்பெனிக்கு”த்தான் பயன்! சேற்றில் உழைக்கும் சிறு விவசாயிக்கு எப்படிப் பயனளிக்கும்? - கழக தலைவர் கேள்வி.
Reply Retweet Like
DMK 8h
விளம்பரம்: விவசாயி எந்த நிலையிலும் ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறும் சுதந்திரமானவராக இருப்பார். உண்மை: கார்ப்பரேட் கம்பெனிக்கும் ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறும் உரிமை இருக்கிறது. ஒப்பந்தத்தை எதிர்த்து நீதிமன்றத்திற்குப் போக முடியாது. - கழக தலைவர் அவர்கள் அறிக்கை.
Reply Retweet Like
DMK 8h
விளம்பரம்: ஒப்பந்தமானது விவசாயிகள் முன்-நிர்ணய விலையைப் பெறுவதற்கு ஏதுவாகும். உண்மை: இது பொய். அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் மூலம் பொருட்களை கார்ப்பரேட் கம்பெனிகள் பதுக்கி வைத்துக் கொள்ளலாம் என்று “தாராளமயம்” செய்யப்பட்டு விட்டது. - கழக தலைவர் அறிக்கை.
Reply Retweet Like
DMK 8h
விளம்பரம்: வேளாண் மசோதா விவசாயிக்குச் சுதந்திரம் வழங்குகிறது. உண்மை: அதிக விலை கிடைக்கும் சந்தையில், விளைபொருட்களை விற்கும் சுதந்திரத்தை விவசாயிகளிடமிருந்து பறிக்கிறது. பண்ணை ஒப்பந்தம் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விவசாயிகளை அடிமைகளாக்குகிறது. - கழக தலைவர் அறிக்கை.
Reply Retweet Like
DMK 9h
விளம்பரம்: மண்டி முறை உள்ளபடியே தொடரும். உண்மை: ஆன்லைன் வர்த்தகத்தால் முதலில் பலியாவது மண்டிகளும், வேளாண் விளைபொருட்கள் விற்பனை ஒழுங்குமுறை கூடங்களும், உழவர் சந்தைகளும்தான். - கழக தலைவர் அவர்கள் குற்றச்சாட்டு.
Reply Retweet Like
DMK 9h
விளம்பரம்: வேளாண் மசோதா குறைந்தபட்ச ஆதார விலையை எதுவும் செய்யவில்லை. உண்மை: குறைந்தபட்ச ஆதார விலை உண்டு என்று குறிப்பிட்டு எந்தப் பிரிவும் வேளாண் சட்டத்தில் இல்லை.“MSP” (Minimum Support Price) என்ற சொற்றொடரே எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. - கழக தலைவர் குற்றச்சாட்டு.
Reply Retweet Like
DMK retweeted
M.K.Stalin 9h
திருப்பூர் அரசு மருத்துவமனை ICU-வில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் உயிரிழந்திருக்கிறார்கள். மருத்துவமனையை நம்பியவர்களின் கொடூர மரணங்கள் இவை! ஆட்சியின் இலட்சணம் இது! கொரோனா மரணங்கள் தவிர அரசின் அலட்சிய மரணங்களும் அதிகரித்து, மக்களைக் கொல்லும் அரசாக மாறிவிட்டது!
Reply Retweet Like
DMK 9h
"பணமதிப்பிழப்பு - ஜிஎஸ்டி வரிவிதிப்பு - கொரோனா ஊரடங்கு கால அறிவிப்புகள் என அனைத்திலும் பிரதமர் அளித்த வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக அனைத்துத்தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளோ பொதுமக்களோ இனியும் ஏமாறத் தயாராக இல்லை" - கழக தலைவர் அறிக்கை.
Reply Retweet Like
DMK retweeted
DMK IT WING 10h
"நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயப் பெருமக்களை, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடிமைப்படுத்தும் பாஜக அரசின் வேளாண் மசோதாக்கள் சட்டமாவதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுகவும், தோழமைக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன" - கழக தலைவர் அறிக்கை.
Reply Retweet Like
DMK 10h
கழக தலைவர் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று 8 நாட்களில் 3,00,000 புதிய உடன்பிறப்புகள் இணையவழியாக திமுகவில் இணைந்துள்ளனர்! Link:
Reply Retweet Like
DMK retweeted
DMK IT WING 10h
"காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாகக் குரல் கொடுக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்" - கழக தலைவர் அவர்கள் அறிக்கை.
Reply Retweet Like
DMK 10h
"மக்கள் நலனில் அக்கறையின்றி - ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களை ஊர் ஊராக அலையவைத்து - நூற்றுக் கணக்கானவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான பாஜக அரசு - தற்போது விவசாயிகளின் வாழ்க்கையுடன் விபரீத விளையாட்டு நடத்தும் வினோத மசோதாக்களை சட்டமாக்கியுள்ளது" - கழக தலைவர் அறிக்கை.
Reply Retweet Like
DMK 11h
“விவசாயிகள் வாழ்வில் வெந்நீரைப் பாய்ச்சும் பாஜக - அதிமுக அரசுகள்!” - கழக தலைவர் அவர்களின் கடிதம். Link:
Reply Retweet Like
DMK retweeted
M.K.Stalin 12h
இந்தி தெரியாவிட்டால் வங்கிக் கடன் கிடையாதா? - ஜெயங்கொண்டம் அதிகாரியொருவர் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் ஆணவத்தைக் காட்டியிருக்கிறார்! இந்தி வெறியை வளர்த்தெடுப்பது பேரபாயம்! தமிழர் உணர்வுடன் விளையாடினால் சிறு பொறிகள் தீப்பிழம்பாகிவிடும்! எச்சரிக்கை!
Reply Retweet Like