Twitter | Search | |
Edappadi K Palaniswami
News and updates from Thiru Edappadi K. Palaniswami, Chief Minister of TamilNadu. Co-Coordinator AIADMK.
5,728
Tweets
56
Following
273,393
Followers
Tweets
Edappadi K Palaniswami 15h
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று (19.02.2020) சென்னை, தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 15h
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, தமிழ்நாடு Dr.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை சார்பில், ரூ.27.65 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு ரூ.6.40 கோடியில் 8 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வழங்கினார்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 15h
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, பாக்-வளைகுடா பகுதி மீனவர்களின் இழுவைப் படகுகளை மாற்றி ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக பரவலாக்கும் திட்டத்தின் கீழ், ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான பதிவு சான்றிதழ் (ம) சாவிகளை இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு வழங்கினார்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 15h
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (19.02.2020) மீன்வளத்துறை சார்பில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு அலுவலர்களுக்கென வடிவமைக்கப்பட்ட குறிவில்லையை (Badge) வெளியிட்டு, 6 காவலர்களுக்கு குறிவில்லையை அணிவித்தார்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 15h
மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சிவகங்கை-கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்படவுள்ள 6ஆம் கட்ட அகழாய்வு பணிகளை துவக்கி வைத்து திருச்சி-துவாக்குடியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கல்வி கட்டடத்தை திறந்து வைத்தார்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 15h
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சென்னை, திருவொற்றியூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகள், கோயம்பேட்டில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு அலுவலக கட்டடம், அம்மா திருமண மண்டபம், 4748 அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 16h
மாண்புமிகு முதல்வர் அவர்கள் கடலூர்-புவனகிரியில் ரூ.3.37 கோடியில் 21 காவலர் குடியிருப்புகள், ரூ.10.76 கோடியிலான 3 காவலர் குடியிருப்பு, 3 காவல் நிலையங்கள், 2 இதர கட்டடங்கள், 1 வட்டார தடய அறிவியல் ஆய்வகம், 1 தீயணைப்பு (ம) மீட்பு பணி நிலைய கட்டடம்,12 குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 17h
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (19.02.2020) மீன்வளத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 19h
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சட்டப்பேரவையில் "காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்" என்ற அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்தார்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 19h
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இன்று கீழ், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 19h
பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25,000 அல்லது வாகனத்தின் விலையில் 50%, இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 19h
தமிழ்நாடு வக்ஃப் வாரியம் சென்னையில் ஒதுக்கீடு செய்யும் நிலத்தில் "ஒரு ஹஜ் இல்லம் கட்ட ரூ.15 கோடி நிதி" ஒதுக்கீடு செய்து புதிய கட்டடம் கட்டப்படும்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 19h
தமிழகத்தில் உள்ள வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற உலமாக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதிய தொகை ரூ.1,500 -லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 19h
4) குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறந்த முதல் 3 மாவட்டங்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்படும். 5) ஆதரவற்ற குழந்தைகள் சமூக நலன், சத்துணவு திட்ட துறையில் TNPSC-ன் எல்லைக்கு உட்படாத C,D பிரிவில் தகுதிக்கேற்ப பணியமர்த்தப்படுவர்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 19h
ஆதரவற்ற குழந்தைகள் குடும்ப சூழ்நிலையில் வளர்வதற்கும், தகுந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, சிறந்த முறையில் வளர்ப்பதற்கும் வளர்ப்பு பெற்றோர்களுக்கு தற்போது 3ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றிற்கு வழங்கப்படும் தொகை ரூ.2000 லிருந்து 4000ஆக உயர்த்தி 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 20h
இந்த சிறப்பு உதவி தொகுப்பில், மேற்கல்வி பயில்தல் திறன் மேம்பாட்டு பயிற்சி வேலைவாய்ப்பு சுயதொழில் செய்தல் ஆகியவை அடங்கும்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 20h
II) ஆதரவற்ற பெண் குழந்தைகள் 18 வயது முடிந்து அரசு குழந்தைகள் இல்லத்தை விட்டு வெளியே சென்ற பின் அவர்கள் பாதுகாப்பு, பொருளாதார நிலைக்கு பாதிப்பு ஏற்படுமானால், அரசு அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய "சிறப்பு உதவி தொகுப்பை" அவர்களின் 50வது வயது வரை வழங்கும்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 20h
மாண்புமிகு அம்மா அவர்கள் நினைவை சிறப்பிக்கும் வகையில் ஆதரவற்ற பெண் குழந்தைகள் நல்வாழ்விற்கு 5 புதிய திட்டங்கள் I) அரசு இல்லங்களில் வாழும் பெற்றோர், பாதுகாவலர் இல்லாத குழந்தைகள் 21 வயதை நிறைவு செய்கையில் அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் அவர்கள் பெயரில் வங்கியில் செலுத்தப்படும்.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 20h
பெண் குழந்தைகளுக்காக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆற்றிய உயர்ந்த சேவையினை நினைவு கூறும் வகையில், "மாண்புமிகு அம்மா அவர்களது பிறந்தநாளை "மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் - பிப்ரவரி 24" ஆக அனுசரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Reply Retweet Like
Edappadi K Palaniswami 20h
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டும், தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் 24.02.2020 - 28.02.2020 வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
Reply Retweet Like